தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
Dindigul King 24x7 |16 Sep 2024 11:14 AM GMT
நத்தம் அருகே பூசாரிபட்டியில் கோவில் இடத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுகுடி அருகே பூசாரிபட்டியில் மந்தை முத்தாலம்மன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் அருகே தனி நபர் ஒருவர் தனது டிராக்டரை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இன்னும் சில மாதங்களில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் டிராக்டர் நிற்பதால் மிகுந்த சிரமம் ஏற்படும் எனக் கூறி ஊர் பொதுமக்கள் தனி நபரிடம் டிராக்டரை அகற்றும் படி கூறியுள்ளனர். இந்நிலையில் தனிநபர் எடுக்க டிராக்டரை எடுக்க மறுத்து கோவில் பணிகள் செய்வதற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூசாரிபட்டி ஊர் பொதுமக்கள் 200 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் நத்தம் வருவாய்துறை மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story