சத்தியமங்கலம் அருகே நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திமுக மகளிர் தொண்டரணி அணியின் ஆலோசனைக் கூட்டம்

சத்தியமங்கலம் அருகே நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திமுக மகளிர் தொண்டரணி அணியின் ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நகர கழக செயலாளரும் - நகர் மன்ற தலைவருமான திருமதி ஜானகி ராமசாமி அவர்களின் தலைமையில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அது சமயம் மகளிர் மற்றும் மகளிர் தொண்டரணிக்கான உறுப்பினர் படிவம் விநியோகிக்கப்பட்டு திராவிட நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்து செயல்பாட்டில் உள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை - புதுமை பெண் - நான் முதல்வன் - இல்லம் தோறும் கல்வி - மக்களை தேடி மருத்துவம் என பல திட்டங்களின் பயனாளிகளை உறுப்பினராக சேர்த்திட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
Next Story