ராசிபுரம் அருகே புதிதாக கோயில் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட போது பழங்கால பெருமாள் சிலை,மணி,கிரீடம் கண்டெடுப்பு..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நவனி தேவேந்திர தெரு பகுதியில் மதுரவீரன் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலின் அருகே உள்ள அரசமரம் மற்றும் வேப்ப மரத்திற்கு இடையே கோயில் கட்டுவதற்கு கடக்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.ஜேசிபி இயந்திரம் மூலம் 5அடி பள்ளம் தோண்டும் போது பழங்கால 2 அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை,மணி,கிரீடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் சிலைகளை மீட்டெடுத்து மதுரவீரன் கோவிலின் உள்ளே வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.பின்னர் சம்பவம் குறித்து பொதுமக்கள் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த துறையினர் சிலைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்டெடுக்கப்பட்ட சிலை ஐம்பொன் சிலையா அல்லது வேறு ஏதாவது உலோக சிலையை என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராசிபுரம் அருகே மண்ணில் புதைந்த கிடந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியில் இருந்து பலர் வருகை புரிந்து வருகின்றனர். மேலும் இது குறித்த அப்பகுதி கிராமத்தை சேர்ந்த சங்கர் கூறுகையில் கண்டுபிடிக்கப்பட்ட சிலையை வைத்து அதே பகுதியில் பெருமாள் கோவில் கட்டுவதாகும் அதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என கூறினார்..
Next Story