காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்.

X
Paramathi Velur King 24x7 |16 Sept 2024 7:20 PM ISTபரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைத்தனர்.
பரமத்தி வேலூர் செப், 16: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், அரசவள்ளி தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கார்த்திக் (27) மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கார்த்திக்கின் வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் சிவக்குமார். இவரது மகள் சுவேதா (19). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதனையடுத்து கார்த்திக்கும் சுவேதாவும் நேற்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள கருப்பண்ணசாமி கோவில் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கருதி வேலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர் . அதனைத்தொடர்ந்து போலீசார் காதல் ஜோடியின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுரேகா தனது காதல் கணவருடன் தான் செல்வேன் என கூறியதால் போலீசார் அவரை அவரது காதல் கணவர் கார்த்திக்குடன் அனுப்பி வைத்தனர்.
Next Story
