பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனைக்கு மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்.பி.,தங்கச் சங்கிலி பரிசாக வழங்கினார்.

விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய - மாநில அரசுகள் விளையாட்டுத் துறைக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து ஊக்கப்படுத்தி விடுவதால், சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்-வீராங்கனைகள் அதிகளவில் பதக்கங்களை வென்று வருகின்றனர் என்றும், சர்வதேச போட்டிகளில் இன்னும் அதிக அளவில் நமது வீரர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள் என்றும் பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய மாணவி துளசிமதி முருகேசன் நாமக்கல்லில் செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார். நடந்து முடிந்த பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி செல்வி. துளசிமதி முருகேசன், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்யூ 5 பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்று நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இம்மாணவி, தற்போது நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.பாராலிம்க்கில் பதக்கம் வென்று மீண்டும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, தமது பெற்றோருடன் திரும்பிய மாணவி துளசிமதி முருகேசனுக்கு, கல்லூரி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில், அக்கல்லூரி வளாகத்தில், மேளதாளம் முழங்க வரவேற்பு தெரிவிக்கப்பட்டு, அனைவரும் மாணவிக்கு, பொன்னாடை அணிவிக்கப்பட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார் ஆகியோர் மாணவிக்கு தங்கச் சங்கிலியை வழங்கி பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் மருத்துவர் ம. செல்வராஜூ, கல்லூரி பேராசிரியர்கள் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர், பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய... மாணவி துளசிமதி முருகேசன், சிறுவயதில் இருந்து எனது தந்தை பயிற்சி அளித்து வந்ததோடு மட்டுமல்லாமல், அரசு விளையாட்டு விடுதிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு அரசுகள் தந்த உதவித்தொகை மூலம் விளையாட்டு துறையில் பயிற்சிகளில் ஈடுபட முடிந்தது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், அனைவரின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.மத்திய மாநில அரசுகள் விளையாட்டு துறைக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்து ஊக்கமளித்து வருகின்றனர். வேலைவாய்ப்பிலும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.மற்ற வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பயிற்சிகள் பணப்பரிசு உள்ளிட்ட அனைத்து உதவிகளும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனைகளுக்கு அரசு வழங்கி வருகின்றது. பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாக அரசு 7 லட்சம் ரூபாய் ஒவ்வொரு வீரருக்கும் ஊக்கத்தொகை வழங்கியது எங்களை, ஊட்டச்சத்து, விளையாட்டு காரணங்கள் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு தயார்படுத்திக் கொள்ள பெரிதும் உதவிகரமாக இருந்தது. விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்கு பயிற்சி எடுக்க கல்லூரி நிர்வாகத்திடம், விளையாட்டுத்துறை அமைச்சர் அரசின் வழிகாட்டுதலின்படி,விடுமுறை பெற்று தந்ததால் என்னால் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டு பதக்கம் வெல்ல முடிந்தது. பாரிஸ் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்யூ 5 பிரிவில் இறுதிப் போட்டியில், எதிர்த்து விளையாடிய சீன வீராங்கனையோடு ஏற்கனவே ஆசிய பாராலிம்பிக் போட்டியில் விளையாடி அவருடன் வெற்றி பெற்றுள்ளேன். இந்த பாரிஸ் பாரா ஒலிம்பிக் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் எனக்கு உடல்நிலை சற்று ஒத்துழைக்காததால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அடுத்த முறை இன்னும் கடினமாக உழைத்து வெற்றி பெறுவேன்.ரியோ பாராலிபிக்கில் 4-ம் டோக்கியோவில் 19-ம் இப்போது 29 பதக்கங்களும் நாம் பெற்றுள்ளதற்கு மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பே காரணம். பாரா ஒலிம்பிக்கில் ஏற்கனவே சாதனை புரிந்த வீரர் மாரியப்பன் தங்கவேலுவை முன்மாதிரியாக கொண்டு, தமிழ்நாட்டில் இருந்து எங்களைப் போன்ற வீரர்- வீராங்கனைகள் இத்துறையில் அதிகமாக ஈடுபட்டு வருகிறோம். எங்களை பார்த்து இன்னும் அதிக மாற்றுத்திறனாளிகள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.எனவே இதுவரை நடந்த போட்டிகளில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டு, என்னை தயார்படுத்திக் கொண்டு நமது நாட்டிற்காக, விளையாடுவேன் என்றும் நாமக்கல்லில் மாணவி துளசிமதி முருகேசன் தெரிவித்தார். முன்னதாக, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் ச. உமா, பெற்றோர் மட்டுமே இளைஞர்களை வழிநடத்தக் கூடியவர்கள். எனவே அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் நல்ல பாதையில் மாணவ மாணவிகள் செல்ல வேண்டும். ஒவ்வொருவரிடமும் இருக்கும் திறமையை நல்ல வகையில் முனைப்போடு நீங்கள் செயல்படுத்தி, நமது நாட்டிற்கும் பெற்றோருக்கும் பெருமை தேடி தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Next Story