இன்று முதல் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை!
Dindigul King 24x7 |16 Sep 2024 5:02 PM GMT
இன்று முதல் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை!
தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊருக்கும், ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற சுற்றுலா தளங்களுக்கும் குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். இந்நிலையில், கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. பேரிஜம் ஏரி பகுதிக்கு வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்னர், சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று இயற்கை அழகை ரசித்து வந்தனர். தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ன்ட், அமைதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் பார்த்து மகிழ்ந்தனர். இந்நிலையில் இன்று செப்.16ம் தேதி காலை முதல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல மறு அறிவிப்பு வரும் வரை தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
Next Story