ராமநாதபுரம் பள்ளி மாணவிகள் சாதனை

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பரிசுகள் வென்ற மாணவிகளை பாராட்டுகின்றனர்
ராமநாதபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் கோப்பைத் தொடரில் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் இருந்து மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து பல விருதுகள் பெற்றுள்ளனர். அதன் வரிசையில் மகளிர் சிலம்பம் போட்டியில் 70 கிலோ பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவி காம்னா ஸ்ரீ மூன்றாவது இடத்தையும், ஆடவர் சதுரங்க போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஐன்ஸ்டன் இரண்டாவது இடத்தையும், 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் அமிர்தா பள்ளி மாணவர்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது கூடைப்பந்து போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவன் சபரீஸ்வரன் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நமது பள்ளி மாணவர்கள் திறம்பட செயல்பட காரணமாக அமைந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களான சர்மா மற்றும் பேபி ஷாலினியைப் பள்ளி மேலாளர் பிரம்மச்சாரினி இலட்சுமி அம்மா அவர்கள் பாராட்டினார். மேலும் பள்ளி முதல்வர் திருமதி கோகிலா மற்றும் பள்ளி துணை முதல்வர் திருபாலவேல் முருகன் அவர்களும் மாணவர்களை வாழ்த்தி பாராட்டினர். மீதமுள்ள போட்டிகளில் மாணவர்கள் வெற்றிக் கனியைப் பெறுவதற்காக முழுவீச்சில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
Next Story