கரூரில் ஓட்டுநர்கள் தினத்தை முன்னிட்டு ஈக்விடாஸ் வங்கி சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கரூரில் ஓட்டுநர்கள் தினத்தை முன்னிட்டு ஈக்விடாஸ் வங்கி சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கரூரில் ஓட்டுநர்கள் தினத்தை முன்னிட்டு ஈக்விடாஸ் வங்கி சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி ஓட்டுநர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுனர்களின் செயல்பாடுகளில் முக்கியமான அம்சம் கண்கள் தான். பார்வை சரியாக இல்லை என்றால் பல விபத்துகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் அவர்களது குடும்ப வாழ்க்கையும், சமூக சூழலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் ஓட்டுனராக உள்ள ஒவ்வொருவரும் தங்கள் கண்களை பரிசோதித்து கொள்வது மிகவும் அவசியம். அதன் அடிப்படையில் இன்று கரூரில் செயல்படும் ஈக்விடாஸ் வங்கி சார்பில், கரூர் பேருந்து நிலையம் அருகே ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சதீஷ் கண் மருத்துவமனை மற்றும் அமோடா கிளினிக் லேப் இணைந்து நடத்தியது. இந்த முகாமை முன்னாள் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்ரமணி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஈக்விடாஸ் வங்கியின் சமூக பாதுகாப்பு அலுவலர் சங்கர், வங்கி மேலாளர் ரமேஷ், மருத்துவர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பங்கேற்று தங்கள் கண்களை பரிசோதித்து கொண்டனர். கண் பாதிப்பு உள்ளவர்களுக்கு வங்கியின் சார்பில் இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
Next Story