அரசு மருத்துவமனையில் பயன்பாடின்றி கிடக்கும் புதிய தங்கும் அறை
Palladam King 24x7 |17 Sep 2024 8:37 AM GMT
பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை
பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.உள் நோயாளிகளாக அனுனதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவ்வாறு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களின் உடன் வரும் உறவினர்களுக்கு அங்கு தங்க அனுமதி இல்லாமல் தவித்து வந்தனர்.எனவே நோயாளிகள் உடப் வருபவர்களுக்கு தங்கும் அறை வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் தீனதயாள் அந்தோதயா யோஜனா திட்டம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஓய்வறை கட்டப்பட்டது.கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா முடிந்து இரண்டு வருடங்களாகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.இதனால் நோயாளிகளுடன் வருபவர்கள் தங்க இடவசதி இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.ஓய்வறை திறப்பு விழா முடிந்தும் இன்னும் பயன்பாட்டிற்கு வராதது ஏன் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Next Story