பாமக சார்பில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயர்நீத்தவர்களுக்கு அனுசரிப்பு...
Sangagiri King 24x7 |17 Sep 2024 10:47 AM GMT
சங்ககிரி:பாமக சார்பில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயர்நீத்தவர்களுக்கு அனுசரிப்பு..
சேலம் மாவட்டம் சங்ககிரியில் வன்னியர் சங்கம், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.... சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் நினைவுதினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1987ம் ஆண்டு நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் நினைவுதினத்தினையொட்டி சங்ககிரி பாமக நகரச் செயலர் அய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் வீர வணக்க முழக்கமிட்டு அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் வன்னியர் சங்க நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
Next Story