காங்கேயம் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

X
காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் கீரனூர் ஊராட்சி அலுவலகத்தில் காங்கேயம் வேளாண்துறை சார்பில் லாபகரமாக ஆடுகள் வளர்ப்பது எப்படி? என்பது பற்றி கால்நடை விவசாயிகளுக்கு அட்மாதிட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது. பொங்கலூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து உதவி பேராசிரியர் மருத்துவர் சுமித்ரா மற்றும் கால்நடை துறை மருத்துவர் கீர்த்தனா ஆகியோர் பயிற்சி அளித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தமணி முன்னிலையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. நிகழ்வில் கீரனூர் ஊராட்சித் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வேளாண் அலுவலர்கள் ரேவதி, சீனிவாசன், அப்துல் ரகுமான் மற்றும் பலர் கலந்து.
Next Story

