மூலனூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாலைகளில் விபத்துக்களை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கும் பணி தீவிரம்
Dharapuram King 24x7 |17 Sep 2024 11:35 AM GMT
மூலனூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாலைகளில் விபத்துக்களை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கும் பணி தீவிரம்
மூலனூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாலைகளில் விபத்துக்களை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கும் பணி தீவிரம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கோட்டம் - மூலனூர் உட்கோட்ட கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சாலைகளில் சாலைப்பாதுகாப்பு பணி நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் விபத்துகளை தவிர்க்க பராமரிப்பு பணிகளுக்கு கவணம் செலுத்த நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் தலைமைப்பொறியாளர் அறிவுரைகளின்படி மூலனூர் உட்கோட்டத்திற்குட்பட்ட மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை மற்றும் மாவட்ட இதர சாலைகளில் முக்கியமான மற்றும் விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் சாலைப்பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்துகளை தவிர்க்க புதிய வேகத்தடைகள் மற்றும் வெள்ளைவரிக்கோடுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மூலனூர் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் பராமாிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story