தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான செஸ் போட்டியில் கல்லூரி மாணவ- மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
Karur King 24x7 |17 Sep 2024 11:49 AM GMT
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான செஸ் போட்டியில் கல்லூரி மாணவ- மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான செஸ் போட்டியில் கல்லூரி மாணவ- மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். தமிழகத்தில் விளையாட்டு துறையில் மாணவ - மாணவியர் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு, தமிழக அரசு "தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான" விளையாட்டுப் போட்டிகளை அறிவித்துள்ளது. இந்த விளையாட்டுப் போட்டியில் பள்ளி, கல்லூரி, மாணவ - மாணவியர்,அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் என ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக 53 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ - மாணவியர், மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இதன் அடிப்படையில் இன்று கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் செஸ் போட்டிகள் நடைபெற்றது. ஏழு சுற்றுகள் லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில், கல்லூரி மாணவ- மாணவியர் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு 3000, 2000,1000- என பரிசு தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story