சிங்காரப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா
Krishnagiri King 24x7 |17 Sep 2024 1:07 PM GMT
சிங்காரப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா
சிங்காரப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை சாலை பகுதியில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில், சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசன், நாவல், ஆலன், அத்தி, வேம்பு, வேங்கை, நீர் மத்தி, உள்பட 5,000 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. நிகழ்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.ஏ.ஐ.,) விழுப்புரம் கிளை மேலாளர் முருகன் தலைமை வகித்தார். வாணியம்பாடி சரக வனகாப்பாளர் குமார், உதவி பொறியாளர்கள் நாகராஜ், உமாநாத், வசந்த் மற்றும் வனவர்கள் சம்பத்குமார், சங்கரன், ஸ்டோர் இன் சார்ஜ் முத்தாண்டி, சைட் என்ஜினியர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுளை நட்டு வைத்தனர். இதனை வனத்துறையினர் ஒரு ஆண்டு காலத்திற்கு பாதுகாத்து வளர்க்க உள்ளனர்.
Next Story