தமிழ்நாடு செங்கொடி மக்கள் நல சங்கம் துவக்க விழா
Virudhachalam King 24x7 |17 Sep 2024 5:21 PM GMT
மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கல்வி மேம்பாட்டுக்கு உதவுவது என தீர்மானங்கள்
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் தமிழ்நாடு செங்கொடி மக்கள் நல சங்கம் துவக்க விழா நடந்தது. மாநில தலைவர் அறிவழகி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ராவண ராஜன் வரவேற்றார். சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பரமசிவம் கூட்டத்தை துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் விவசாயிகள் மாணவர்கள் இளைஞர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது, தமிழ் மொழி அறிஞர்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கல்வி மேம்பாட்டுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலகுருசாமி, மாநில அமைப்பு குழு உறுப்பினர் தமிழரசன், சங்க ஆலோசகர் விஜயபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். முடிவில் மாநில பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
Next Story