விருத்தாசலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்சார் சார்பதிவாளர் வீட்டில் சோதனை
Virudhachalam King 24x7 |17 Sep 2024 5:24 PM GMT
முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல்
திருக்கோவிலூரில் சார் பதிவாளர் அலுவலகத்தில் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் சார் பதிவாளராக இருந்து வருகிறார் நேற்று முன்தினம் தமிழக முழுவதும் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர் இதில் திருக்கோவிலூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 2.23 லட்சம் லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர் இதன் தொடர்ச்சியாக திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில் வசித்து வருகிறார் இந்நிலையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் அவரது இல்லத்தில் சுமார் அரை மணி நேரம் சோதனை நடத்தினர் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிகிறது விருத்தாசலத்தில் சார் பதிவாளர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
Next Story