உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
Virudhachalam King 24x7 |17 Sep 2024 5:26 PM GMT
மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் அருகே உள்ள தொரவலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 17 அன்று அனைத்து துறை அதிகாரிகளும் மரக்கன்று நட அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா அருளரசன் தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அருளரசன் முன்னிலை வகித்தார். விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் கலந்து கொண்டு பள்ளியின் நுழைவு வாயில் முன்பு வேப்பமரம், புங்கமரம், வேப்பமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கி பொது மக்களிடையே பேசினார். இந்நிகழ்ச்சியில் வனவர்கள் சிவக்குமார், சஞ்சீவி, நவநீதகிருஷ்ணன், வனக்காப்பாளர் அமுதப்பிரியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவச்செல்வி தென்றல், ஊராட்சி செயலர் தமிழ்ச்செல்வன், வார்டு உறுப்பினர் மலர்க்கொடி மாயகிருஷ்ணன், பிரபாகர் பணித்தள பொறுப்பாளர் சந்தியா ஜெயசித்ரா, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story