கரூரில் கொலை வழக்கில் மேலும் இருவர் மீது குண்டாஸ் சட்டம் பயந்தது.

கரூரில் கொலை வழக்கில் மேலும் இருவர் மீது குண்டாஸ் சட்டம் பயந்தது.
கரூரில் கொலை வழக்கில் மேலும் இருவர் மீது குண்டாஸ் சட்டம் பயந்தது. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது, மேலும் இந்த வழக்கில் குற்றப் புலனாய்வு விசாரணை மேற்கொண்டதில், கரூர் காந்திகிராமம் பெரியார் நகரை சேர்ந்த ராமசாமி மகன் மதன கார்த்திக் வயது 19 என்பவர் மீதும், கரூர் மாவட்டம், தொழில்பேட்டை, ஆசிரியர் காலனியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ஜெயா என்கிற அருண்குமார் வயது 19 ஆகிய இருவர் மீதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்ற புலனாய்வு மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றிய கரூர் காவல்துணை கண்காணிப்பாளர் மற்றும் பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். மேலும்,கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்தான் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story