கோடங்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார் ஆட்சியர்.

கோடங்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார் ஆட்சியர்.
கோடங்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார் ஆட்சியர். "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதா? வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் தரமாக உள்ளதா? நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பதை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதார அலுவலர் சந்தோஷ் குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு சிகிச்சை பெறும் பெண்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார். மேலும், நோயாளிகளிடம் சென்று, இங்கே மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளின் தேவை அறிந்து பணியாற்றுகிறார்களா? எனவும் விசாரித்து தெரிந்து கொண்டார்.
Next Story