திருச்செங்கோட்டில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு போராட்டம்
Tiruchengode King 24x7 |18 Sep 2024 10:39 AM GMT
திருச்செங்கோட்டில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு போராட்டம்
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் பெரிய மணலி பகுதியில் வாழ்ந்து வரும் 233 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைக்கான நிலம் வேண்டி 2019 முதல் இன்று வரை தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகம், ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், குடிபுகும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தக்க தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே இன்று திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். ஆனால் காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க குடிபுகும் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டு திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்புமணி போராட்டத்தை துவக்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 233 குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்க வலியுறுத்தியும் அந்த வீட்டு மனைகளுக்கான பட்டா வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அன்புமணி கூறும் போது 2019 ஆம் ஆண்டு முதல் பெரிய மணலி பெரிய மணலை பகுதியில் வசிக்கும் 233 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தக்க தீர்வு கிடைக்கவில்லை தற்போது குடிபுகும் போராட்டம் அறிவித்து சில பல காரணங்களால் அதனை ஒத்திவைத்துவிட்டு தற்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் எனவே குறைவாக 233 குடும்பங்களுக்கு வீட்டு மனை ஒதுக்கி பட்டா வழங்க வேண்டும் இல்லாவிட்டால் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என கூறினார் இந்த போராட்டத்தில் 80 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்
Next Story