அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி
மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருப்பூர் மாவட்டத்தில் 27 ஆரம்ப சுகாதார நிலையங்களை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் மேம்படுத்திட ஆணை வழங்கப்பட்டு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அந்த வகையில் அருள்புறம் உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுலோச்சனா நிறுவனத்தின் சார்பில் 4 லட்சம் ரூபாய் மற்றும் லிசார்க் நிறுவனம் மற்றும் கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் ஆகியோர் தலா ஐந்து லட்சம் என மொத்தம் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கரைபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் சுலோச்சனா நிறுவன உரிமையாளர் கண்ணன் லீசார் நிறுவன உரிமையாளர் கிரண் சா மாவட்ட சுகாதார அலுவலர் முரளி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story