ஜேடர்பாளையம் அருகே தனியார் வங்கி மேலாளர் அடித்துக் கொலை.

தனியார் வங்கி மேலாளரை அடித்துக் கொன்ற வழக்கில் கைதான ரெயில்வே அதிகாரி உள்பட 2 பேர் சேலம் சிறையில் அடைப்பு.
பரமத்தி வேலூர், செப்.18- பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (65). இவரது மளைவி மணிமேகலை (60). இவர்களது மகன் மனோஜ் (33). இவரது சகோதரிகள் சுதா, லதா திருமணம் ஆகிவிட்டது. மனோஜுக்கு வீரணம்பா ளையம் அருகே உள்ள சூரியாம்பாளையம் பகுதி யைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் பிரியா (30) என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். மனோஜ் கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். அதே போல் பிரியா கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மனோஜ், பிரியா தம்பதியினருக்கு ஆதியுகள் என்ற 2 வயது மகன் உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக -கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரியா கரூர் மாவட்ட ஜெயா சூப்பிரண்டு அலுவலகத்தி ற்கு மாறுதல் பெற்று அங்கு 5 பணியாற்றி வருகிறார். மனோஜ் கோவையில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். வாரத்தில் ஒருமுறை தண்ணீர் பந்தல் வீட்டிற்கு வந்து பெற்றோர்களை பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில் மனோஜின் சகோதரி துறையூரில் உள்ள லதா என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரைப் பார்ப்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனோஜ் தண்ணீர் பந்தல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி பிரியாவிடம் துறையூர் சென்று தனது சகோதரியை பார்த்து வரலாம் என்று கூறியுள்ளார். அதற்கு தான் இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பிரியா வழக்கம் போல் புறப்பட்டு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார். பிரியா வீட்டிற்கு வந்ததும் கணவன், மனைவியிடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. இதில் பிரியா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்காக பெற்றோருக்கு போன் செய்து அவர்களை வரவழைத்து விட்டு தண்ணீர் பந்தல் பஸ் நிலையத்திற்கு சென்று விட்டார். அங்கு வந்த மனோஜ் மற்றும் அவரது பெற்றோர் பிரியாவிடம் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து செல்ல அங்கு வந்தனர். அப்போது அங்கு வந்த பிரியாவின் பெற்றோர்கள் மனோஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இதில் பிரியாவின் சகோதரர் சுந்தரராஜன் மற்றும் அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர் மனோஜை கடுமையாக தாக்கி அங்கிருந்த இரும்பு கம்பியை கொண்டு மார்பில் தாக்கியுள்ளனர். இதில் நிலை குழைந்து கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த பிரியாவின் சகோதரர் மற்றும் நண்பர் அங்கிருந்து காரில் சென்றுவிட்டனர். கீழே மயங்கி கிடந்த மனோஜை அவர் பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மனோஜின் தாயார் ஜேடர் பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகரின் அடிப்படையில் மனோஜ் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து சுந்தரராஜன் மற்றும் சக்திவேல் கைதி செய்தனர். தொடர்ந்து பரமத்தி குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story