விருத்தாசலம் ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

X
விருத்தாசலம் ஒன்றிய குழு கூட்டத்தில் 10 கவுன்சிலர்கள் ஒன்றிய பொது நிதியை கடந்த ஒன்றை வருடங்களாக ஒதுக்கவில்லை, இதனால் வளர்ச்சி திட்ட பணிகளையும் அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற முடியவில்லை எனக் கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த இந்தப் போராட்டம் இரவு வரை நீடித்த நிலையில் அய்யாசாமி என்ற சுயேச்சை கவுன்சிலர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

