நள்ளிரவில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

நள்ளிரவில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

நள்ளிரவில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் 

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் காஞ்சிபுரத்தில் பிரதான கோரிக்கையாக உள்ள போக்குவரத்து நெரிசலை தடுக்க நள்ளிரவில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்





காஞ்சிபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர். "உங்களை தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் மூலம், பொது சேவையை மேம்படுத்தவும், பல்வேறு திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அரசின் திட்டங்கள் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் மற்றும் மூத்த அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் 4-வது புதன்கிழமையில் குறிப்பிட்ட ஒரு தாலுகாவில் 24 மணி நேரமும் செலவிட வேண்டும். பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும், உள்கட்டமைப்பை ஆய்வு செய்யவும், பொதுமக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாகப் புரிந்துகொள்ளவும் இந்த பணிகள் அமையும்.

இந்நிலையில் புதன் கிழமை காஞ்சிபுரத்தில் காலை முதல் மகளிர் காவல் நிலையம், காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலை, நியாய விலை கடை, சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர், இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பிரதான கோரிக்கையாக உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து நள்ளிரவு அதிக நெரிசல் ஏற்படும் பூக்கடை சத்திரம், வடக்கு ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வின் காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாநகராட்சி ஆணையர், போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story