தாளவாடி ஒற்றை யானை முன் செல்பி எடுக்கும் ரீல்ஸ் பண்ணும் இளைஞர்கள்
Bhavanisagar King 24x7 |19 Sep 2024 6:07 AM GMT
தாளவாடி ஒற்றை யானை முன் செல்பி எடுக்கும் ரீல்ஸ் பண்ணும் இளைஞர்கள்
தாளவாடி ஒற்றை யானை முன் செல்பி எடுக்கும் ரீல்ஸ் பண்ணும் இளைஞர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம். சில யானைகள் சாலையில் உலா வருவது தொடர்கதையாகி விட்டது. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை தாளவாடி அருகே ரோட்டில் நின்று கொண்டு இருந்தது. அந்த வழியாக வாகனத்தில் வந்த இளைஞர்கள் யானை நிற்பதை கண்டு ஆபத்தை உணராமல் யானை அருகில் நின்று செல்பி , ரீல்ஸ் வீடியோ எடுத்ததை கண்ட மற்ற வாகன ஒட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த காட்சியை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் வெப்சைட்டில் பதிவிட்டனர். அது தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதி சாலையோரமாக உலா வரும் யானை போன்ற வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் செல்போன் மூலம் படம் எடுக்க கூடாது என வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், சுற்றுலா பயணிகள் இதை கண்டு கொள்வதில்லை என தெரிவித்தனர்.
Next Story