மாரியம்மன் கோவில் அருகே டூவீலரை களவாடிய இருவர் கைது.
Karur King 24x7 |19 Sep 2024 9:56 AM GMT
மாரியம்மன் கோவில் அருகே டூவீலரை களவாடிய இருவர் கைது.
மாரியம்மன் கோவில் அருகே டூவீலரை களவாடிய இருவர் கைது. கரூர் மாவட்டம், தென்னிலை கீழ்பாகம், பன்னிவடைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது 35. இவர் அப்பகுதியில் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி இரவு 9 மணி அளவில், க. பரமத்தி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அவரது டூவீலரில் சென்று உள்ளார். டூ வீலரை கோவிலின் அருகே நிறுத்திவிட்டு, கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது டூவீலர் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து க.பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நல்ல பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஹரிஹரன் வயது 19 என்பவரும் பெயிண்டர் வேலை செய்து வரும் ,மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகரை சேர்ந்த சுந்தர் வயது 27 என்பவரும் டூவீலரை களவாடியது தெரியவந்தது. எனவே, இருவரையும் கைது செய்து, ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள டூ வீலரை மீட்டனர் காவல்துறையினர். மேலும், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் க. பரமத்தி காவல்துறையினர்.
Next Story