ஸ்ரீபெரும்புதூரில் மின் கம்பங்களை அகற்றாமல் நடைபெறும் வரும் மழைநீர் வடிகால் வாய்ப் பணி

ஸ்ரீபெரும்புதூரில் மின் கம்பங்களை அகற்றாமல் நடைபெறும் வரும் மழைநீர் வடிகால் வாய்ப் பணி

ஸ்ரீபெரும்புதூரில் மின் கம்பங்களை அகற்றாமல் நடைபெறும் வரும் மழைநீர் வடிகால் வாய்ப் பணி

ஸ்ரீபெரும்புதூரில் மின் கம்பங்களை அகற்றாமல் நடைபெறும் வரும் மழைநீர் வடிகால் வாய்ப் பணி - தேங்கி நிற்கும் கழிவு நீர் மக்கள் அதிருப்தி.





காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நகரில் உள்ள காந்தி சாலை, தேரடி சாலை, திருவள்ளூர் சாலை என பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்து காணப்பட்டு வந்தன. மேலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வந்ததின் காரணமாக சாலைகள் சீரமைக்கப்படாமல் கிடப்பில் இருந்தன. தற்போது இந்த பணிகள் முடிவடைந்த பிறகு புதிய சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலை துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக பஜாரில் இரு புறங்களிலும் மழைநீர் வடிகால்வை அமைக்கும் பணிகள் ரூ.6.9 கோடி செலவில் 1.1 கிலோ மீட்டருக்கு கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கால்வாய் கட்டப்படும் பகுதிகளில் இடையூறாக மின் கம்பாங்கள் உள்ளன. அதனை அகற்றப்படாமல் மழைநீர் வடிகால்வாய் பணி நடக்கிறது. மின் கம்பங்கள் இடம்பெறும் பகுதிகளில் கால்வாய் கட்டப்படாமல் உள்ளன. இதனால் நடுவுல கொஞ்சம் கால்வாயை காணோம் என்பதை போல உள்ளன. மேலும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நேரம் முறையாக வெளியேற வழி இன்றி தேங்கி நின்று. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு நடைபெற்று வரும் கால்வாய் பணிகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே கம்பங்களை அகற்றி, முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் மகாலிங்கம் ; பணிகள் தொடங்குவதற்கு முன்பே, மின்கம்பங்களை இடம் மாற்றம் செய்ய, மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்கள் அகற்ற நடவடிக்கை இல்லை. இதனால் மின்கம்பங்கள் உள்ள இடங்களை தவிர்த்து, பிற இடங்களில் கால்வாய் அமைக்கப்பட்டு வருகின்றன. மின்கம்பங்களை அகற்றி தந்த பிறகு மீதமுள்ள இடங்களிலும் கால்வாய் கட்டப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.

Next Story