விருத்தாசலத்தில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

X
டிஜிட்டல் கிராப் சர்வே பணியை கண்டித்து கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி துரைராஜ் தலைமை தாங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு ஜனவரி 8 உடன்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு அண்டை மாநிலங்களில் உள்ளது போல கூடுதல் பணியாளர்களை நியமித்திட வேண்டும். அவரவர் துறை சார் பணிகளை அவரவர்களுக்கே வழங்கிட வேண்டும், வேளாண்துறை பணிகளை வேளாண்துறைக்கே வழங்கிட வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே பணியை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

