மணக்கடவு ஊராட்சி தேர்பட்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு
Dharapuram King 24x7 |20 Sep 2024 2:59 AM GMT
மணக்கடவு ஊராட்சி தேர்பட்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு
மணக்கடவு ஊராட்சி தேர்பட்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மணக்கடவு ஊராட்சி தேர்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவம் முகாம் இன்று தேர்பட்டியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ் வி செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு மருத்துவ முகாமினை ரிப்பன் வெட்டி துவக்கி மேலும் இந்த முகாமில் தாராபுரம் வட்டார மருத்துவர் தேன்மொழி மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் பேசுகையில் தமிழகத்தில் மகளிர்க்கு அதிகப்படியான திட்டங்களை தமிழக முதலமைச்சர் செய்து வருவதாகவும், அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா சேவையையும், மேலும் நான் முதல்வன் திட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பயன் பெற்று வருவதாகவும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த மருத்துவ முகாமில் மனக்கடவு கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இலவசமாக போன்றவற்றை பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் இந்த மருத்துவ முகாமில் முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் அனைத்து விதமான வியாதிகளுக்கும் மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த முகாமில் மனக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக முன்னாள் இன்னால் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story