அரசு மருத்துவ கல்லுாரியில் மருந்தியல் விழிப்புணர்வு பேரணி

அரசு மருத்துவ கல்லுாரியில் மருந்தியல் விழிப்புணர்வு பேரணி
பேரணி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரியில் மருந்தியல் சார்புலனாய்வு வார விழாவையொட்டி மருத்துவ மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இயங்கி வரும் மருந்து பக்க விளைவுகள் கண்காணிப்பு மையம், இந்திய மருந்தியல் ஆணையம், தேசிய ஒருங்கிணைப்பு மையம் சார்பில் மருந்தியல் சார்புலனாய்வு வார விழா பேரணி நடந்தது. பேரணிக்கு கல்லுாரி முதல்வர் நேரு தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.பேரணியில் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை உடனடியாக தெரியப்படுத்த வலியுறத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் மருந்தியல் துறை துணை பேராசிரியர்கள் மகாலட்சுமி, சவுந்தரபாண்டியன், ஸ்ரீநாத், கோபாலகிருஷ்ணன், சத்யா, தரணிதரன் உட்பட மருத்துவ பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story