கோயில் ஏரி பகுதி மீட்டு தர கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு
Maduranthakam King 24x7 |20 Sep 2024 5:19 AM GMT
கோயில் ஏரி பகுதி மீட்டு தர கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு
செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பச்சம்பாக்கம் ஊராட்சி நரியூர் கிராமத்தில் கிராம தேவதை கோயிலாக செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர் சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவுகம் , மேலும் அதேதனி நபர்கள் இக்கிராமத்திற்கு சொந்தமான ஏரி பகுதி மற்றும் ஏரிக்கரை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கவுன்சிலர் ஊராட்சி பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் இதுகுறித்து நேற்று செய்யூர் வட்டாட்சியர் சரவணனனை நேரில் சந்தித்து ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் மற்றும் ஏரி நிலத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Next Story