துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை வழங்க கோரி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
Maduranthakam King 24x7 |20 Sep 2024 5:26 AM GMT
துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை வழங்க கோரி அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
அம்பேத்கர் சிலை மற்றும் சமத்துவ பூங்கா பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை வழங்க கோரி அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம். செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் -சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அருகே அம்பேத்கர் சிலை சமத்துவ பூங்கா புத்தர் சிலை உள்ளது... இப்பகுதியில் பல ஆண்டுகளாக மின்சாரம் இருந்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.. பின்பு ஊராட்சி நிர்வாகத்தால் மின் இணைப்பு பெற்று மின் இணைப்பு வழங்கப்பட்டது.. மின் இணைப்பு கொடுத்து இரண்டே நாட்களில் மீண்டும் துண்டிக்கப்பட்டது. இதனை கண்டித்தும் ஊராட்சியில் நிர்வாகம் ஒருதலைச் பட்சமாக செயல்படுவதாக கூறி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி மின்சாரம் உடனடியாக வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story