ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொன்னேரி எம்எல்ஏ ஆய்வு
Tiruvallur King 24x7 |20 Sep 2024 11:22 AM GMT
காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை பொன்னேரி எம்எல்ஏ ஆய்வு செய்தார்
காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை பொன்னேரி எம்எல்ஏ ஆய்வு செய்தார். அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் கூடுதலாக இரவு நேரங்களில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது அவரிடம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் சிகிச்சை பெறும் நோயாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள் கடும் அவதி அடைந்து வருவதாகவும் ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டும் என்றும் ரத்தம் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆய்வகத்திற்கு குளிர் சாதன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அவர்களை காண வருபவர்களுக்கு தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் மருத்துவமனையை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றிட வேண்டுமெனவும் இரவு நேரங்களில் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். இதில் காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அத்திப்பட்டு புருஷோத்தமன் பழவேற்காடு ஜெயசீலன் அபூபக்கர் விடுதலை சிறுத்தைகட்சி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்
Next Story