குமரியில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை

குமரியில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை
சுகாதாரதுறை இயக்குநர் பேட்டி
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கடந்த 18ஆம் தேதி முதல் குமரி கேரளா எல்லை சோதனை சாவடிப் பகுதியில் கண்காணிப்பு பணிகளை 24 மணி நேரமும் மேற்கொண்டு வருகிறார்கள்.     இந்த நிலையில்  தமிழ்நாடு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் இன்று (20-ம் தேதி) காலையில் களியக்காவிளை சோதனை சாவடியில் நேரில் பார்வையிட்டு நிபா வைரஸ் குறித்து துறை  அலுவலர்களிடம் கேட்டு அறிந்தார். மாவட்ட கலெக்டர் அழகு மீனா உட்பட அதிகாரிகள் இந்த ஆய்வில் உடன் இருந்தனர்.      இதை எடுத்து டாக்டர் செல்ல விநாயகம் நிருபர்களிடம்  கூறுகையில்:-  தமிழ்நாட்டில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. ஆனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரளா எல்லையோர மாவட்டமான குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 400க்கும் மேற்பட்டவரிடம் சோதனை நடத்தி உள்ளனர். ஆனால் யாருக்கும் காய்ச்சல் இல்லை.       மேலும் அனைத்து மருந்து மருத்துவ வசதிகளும் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி உட்பட நான்கு மருத்துவ கல்லூரிகளில் படுக்கை வசதிகளுடன் தனிவாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
Next Story