ராசிபுரம் ஸ்ரீ காளியம்மனுக்கு வெள்ளிக்காப்பு சிறப்பு அலங்காரம்..

ராசிபுரம் ஸ்ரீ காளியம்மனுக்கு வெள்ளிக்காப்பு சிறப்பு அலங்காரம்..
ராசிபுரம் ஸ்ரீ காளியம்மனுக்கு வெள்ளிக்காப்பு சிறப்பு அலங்காரம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி ரயில் நிலையம் செல்லும் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ காளியம்மன் சாமிக்கு முக்கிய அபிஷேகங்களான பால் தயிர் மஞ்சள் சந்தனம் தேன் பஞ்சாமிர்தம் இளநீர் பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் ஸ்ரீ காளியம்மனுக்கு வெள்ளிக்காப்பு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர். சிறப்பு அலங்காரத்தை கோவில் பூசாரி கணேசன் செய்திருந்தார்.
Next Story