பா.கொத்தனூர் கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு

பா.கொத்தனூர் கிராம மக்கள்   நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு
புதிய பைப் லைன் அமைக்க எதிர்ப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த வேப்பூர் வட்டத்திற்கு உட்பட்ட பா.கொத்தனூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான காட்டுமயிலூர் - ஆதியூர் சாலையில் பா.கொத்தனூர் கிராமம் அமைந்துள்ளது. இச்சாலையில் ஏற்கனவே கொத்தனூர் கிராம மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்வதற்கு, ஊராட்சிக்கு சொந்தமான பைப்லைன் செல்லும் நிலையில், அக்கிராமத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர், தனது சொந்த வேலை காரணமாக புதிதாக பைப்லைன் அமைப்பதற்கு, நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெற்று பணியை பைப் லைன் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். அவ்வாறு தனிநபருக்காக, பைப்லைன் அமைக்கப்பட்டால், ஊராட்சி பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைவார்கள் எனவும், சம்பந்தப்பட்ட தனிநபருக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என, அக்கிராம மக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் விருத்தாச்சலம் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அய்யாதுரையை சந்தித்து மனு அளித்தனர். மேலும் தங்களது மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட தனிநபருக்கு வழங்கப்பட்டு அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி இல்லாமல், பொய்யான தகவல் அளித்து தனிநபர் நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும், அவ்வாறு பெற்ற அனுமதியினை, ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story