குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது
கைது
அரசு அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கடந்த 15.08.2024–ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், இ.கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேட்டு மற்றும் காவலர்கள் கூத்தனூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்கு இடமாக வந்த எறையூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆப்ரகாம் மகன் காட்டுமனுஷன் @ குழந்தைராஜ்(36) என்பவர் அரசு அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கியை வைத்திருந்தது தெரியவரவே மேற்கண்ட நபரை கைது செய்து விசாரணைக்குப் பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் தொடர்ந்து இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், இவர் வெளியே வந்தால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கையில் தொடரந்து ஈடுபடுவார் என்பதாலும் இவரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நேற்று கடலூர் மத்திய சிறையில் உள்ள குற்றவாளிக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு சார்வு செய்யப்பட்டது.
Next Story