உடன்குடி பேரூராட்சி துணை தலைவரை பதவி நீக்க தீர்மானம்?
Thoothukudi King 24x7 |21 Sep 2024 2:20 AM GMT
உடன்குடி திமுக உட்கட்சி பூசல் எதிரொலியாக பேரூராட்சி துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி தலைவியாக ஹிமேரா ரமீஸ் பாத்திமா உள்ளார். அவரது கணவர் அசாப் அலி பாதுஷா உறுப்பினராக உள்ளார். உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவராக நகர திமுக செயலாளர் மால் ராஜேஷ் உள்ளார். அறுவை சிகிச்சை காரணமாக உடல் நலம் குன்றி இருந்த துணைத் தலைவர் மால் ராஜேஷ், மூன்று கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக வரவில்லை. இதை பயன்படுத்தி அவரது பதவியை பறிக்க பேரூராட்சி தலைவர் திட்டமிட்டார். துணைத் தலைவர் மருத்துவ சான்று அளித்த நிலையிலும், கூட்டத்தில் கலந்து கொள்ளாததை சாக்கிட்டு அவரை வெளியேற்ற இன்று நடைபெறும் கூட்டத்தில் அதற்கான தீர்மானத்தை வைத்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த திமுக தொண்டர்கள் சிலர், ‘உட்கட்சி பூசலாலும், ஊழல் பிரச்சனையாலும் இந்த உள்குத்து நடக்கிறது. இதற்கு உள்ளூர் அமைச்சரின் ஆசியும் இருக்கிறது. கட்சி வளர்ச்சிக்கு இது கேடாக முடிந்து விடும் போல் தெரிகிறது ‘ என்கிறார்கள். நெல்லை, கோவை மாநகராட்சிகள் தொடங்கி, நகராட்சி பேரூராட்சி வரை உட்கட்சி பூசல் தொடர்ந்து வருவதால் திமுக தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
Next Story