உடுமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலை திறப்பு
Udumalaipettai King 24x7 |21 Sep 2024 2:29 AM GMT
அமைச்சர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரவுண்டானா அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பல மாதங்களாகவே ரவுண்டானா போதிய பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சியளித்து வந்த நிலையில் பொதுமக்கள் ரவுண்டானாவை பராமரித்து அழகு படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர் இந்த நிலையில் தன்னார்வலர்கள் உதவியுடன் தற்போது பிறப்பிற்கும் எல்லா உயிருக்கும் என்ற வல்லவனின் குரளுக்கிணங்க தமிழுக்கும் தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஏறு தழுவுவதற்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்துக்கள் மற்றும் வீரர்களுடன் கூடிய ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற சிலை ,வண்ண வண்ண விளக்குகள் மற்றும் செயற்கை நீரூற்றுப் பூங்கா ,நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமூக பங்களிப்பு நிதியில் அமைக்கப்பட்ட தலைவர்கள் பூங்கா புதுப்பிக்கப்பட்ட அசோகர் ஸ்தூபி சந்திப்பு ஆகியவற்றை இன்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். உடுமலையின் அடையாளமாக அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை மற்றும் செயற்கை நீரூற்று முன்பு பொதுமக்கள் தன் படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர் இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் நகர மன்ற தலைவர் மத்தின் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story