போலி நகை கொடுத்து ஏமாற்றியவர் கைது!

போலி நகை கொடுத்து ஏமாற்றியவர் கைது!
குற்றச் செய்திகள்
ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக் கோட்டை காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (47). சம்பவத்தன்று இவரிடம், செல்போனில் தொடர்பு கொண்ட வெளிமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னிடம் தங்க நகைகள் இருப்பதாகவும், குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறி, ரூ. ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு நகைகளை வழங்கினார். அந்த நகைகளை பரிசோதனை செய்வதற்காக நகைக்கடைக்கு எடுத்துச்சென்றபோது, அது போலியானது என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதையறிந்த செல்வராஜ் இதுபற்றி ஆலங்குடி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார், சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது, நகைகளை விற்றவர் ஆலங்குடி காமராஜர் சிலை அருகே இருப் பது செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடிக்கபட்டது. அவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிஷன் (34) என்றும், போலி நகை கொடுத்து, பணம் வாங்கியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கிஷனை போலீசார் கைது செய்து ஆலங்குடி கோர்ட்டில் மாஜிஸ்திரேட் விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக் கோட்டை சிறையில் அடைத்தனர்.
Next Story