வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
Dharapuram King 24x7 |21 Sep 2024 3:22 AM GMT
வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பேரவை கிறிஸ்துராஜ் ஆகியோரிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நேற்று தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தாராபுரம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 30 வார்டு பகுதிகளிலும் 40 ஆண்டு காலத்திற்கு மேலாக நத்தம் புறம்போக்கில் குடியிருந்து கொண்டு இருப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி நகர மன்ற தலைவர் பொறியாளர். கு.பாப்பு கண்ணன்.தலைமையில் தாராபுரம் வட்டாட்சியர் திரவியம் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர், நில அளவையாளர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்கள் கலந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய நகர மன்ற தலைவர் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல பகுதிகளில் பல வருடங்களாக பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அலுவலரிடம் மனு அளிக்கும் இதுவரை எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே இந்த முறை பல அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது எனவே அந்த மனுவை பரிசீலனை செய்து வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும் அதேபோல் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு முன்பு கள ஆய்வு செய்து உரிய நபர்களுக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story