போக்குவரத்து காவல் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
Dharapuram King 24x7 |21 Sep 2024 3:25 AM GMT
போக்குவரத்து காவல் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
போக்குவரத்து காவல் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தாராபுரம் பிஷப் தார்ப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போக்குவரத்துக் காவல் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ராஜேஷ் வரவேற்றார். தலைமை உரையாக கல்லூரியின் முதல்வர் லிட்டர் ஆர் எஸ் பேசுகையில் காவல்துறையின் சிறப்பு பற்றியும் சட்டத்துறையின் சிறப்பு பற்றியும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சுதா பேசுகையில் ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் ஓட்ட வேண்டும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என கூறினர் தாராபுரம் போக்குவரத்து ஆய்வாளர் சஜினி பேசுகையில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டி இழப்பு ஏற்பட்டால் குடும்பமே கஷ்டப்படும் தற்போது போக்குவரத்துக் காவலர்களை கண்டாலே எதிரி போல் பார்க்கிறார்கள் உங்களின் நலனுக்காகவே நாங்கள் கூறுகிறோம் என்று கூறினார். வழக்கறிஞர் திருமதி சகுந்தலா கூறுகையில் பெண் உரிமை சட்டங்கள் பற்றியும் பெண்கள் உரிமை பற்றியும் கூறினார் வழக்கறிஞர் எம் ராஜேந்திரன் பேசுகையில் இக்கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் நன்றி தெரிவித்தும் செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் நன்மைகள் பற்றியும் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகளை பற்றியும் போட்டி தேர்வு பற்றியும் கூறினார். தாராபுரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் பேசுவையில் இலவச சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் பற்றியும் போக்குவரத்து விதிகள் மையத்தின் செயல்பாடுகள் பற்றியும் போக்குவரத்து விதிகள் பின்பற்றுதல் பற்றியும் பெண் உரிமை சட்டங்கள் பற்றியும் கூறினார் நன்றியுறையாக ஏஞ்சலின் பிரபா நாட்டு நலப் பணி த்திட்ட அலுவலர் முகாமிற்கு வந்தோர் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த விழிப்புணர்வு முகாமில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story