இந்திய ராணுவ கல்லூரியில் சேர அறிய வாய்ப்பு
Sivagangai King 24x7 |21 Sep 2024 5:28 AM GMT
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் டேராடூன் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரியில் 2025ம் கல்வி ஆண்டில் சேர செப்.,30க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ கல்லூரியில் பயில விரும்பும் இளைஞர்கள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்டிரிய ராணுவ கல்லுாரியில் 2025ம் ஆண்டு ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு டி.என்.பி.எஸ்.சி., மூலம் 2024 டிச., 1ல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், சேர எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். வயது (1.7.2024ன் படி) 11.5 முதல் 13 க்குள் இருத்தல் வேண்டும். இதற்கான நுழைவு தேர்வு 2024 டிச., 1 அன்று காலை, மதியம் நடைபெறும். ஆங்கிலம் (125 மதிப்பெண்), கணிதம்(200 மதிப்பெண்), பொது அறிவு (75 மதிப்பெண்) தேர்வின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்முக தேர்வுக்கு (50 மதிப்பெண்) அழைக்கப்படுவர். விண்ணப்பத்தை ''The Commandant, Rashtriya Indian Military College, Garhi Cntt., Dehradun, Uttarakhand- 248 003'' என்ற முகவரியில் பெற்று, விண்ணப்பத்துடன் பொது பிரிவினர் ரூ.600, எஸ்.சி., எஸ்.டி.,யினர் (ஜாதி சான்று அவசியம்) ரூ.555க்கான காசோலையை HDFC bank, Ballupur chowk, Dehradurm, Uttarakhand (வங்கி குறியீடு1399) யை விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். மற்றொரு விண்ணப்பத்தை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு செப்., 30அன்று மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும்வகையில் அனுப்ப வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story