பேருந்து நிழற்குடையில் ஆதரவற்ற முதியவர்

X
பல்லடம் தாலூக்கா, பணிக்கம்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சின்னியகவுண்டன் பாளையத்தில் உள்ள பேருந்து பயணிகள் காத்திருப்பு நிழற்குடையை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆதரவற்ற முதியவர் தங்கி உள்ளார். பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் காய்ந்தும், மலையில் நனைந்தும் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் பேருந்து பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஆகவே, இந்த முதியோரை முதியோர் காப்பகத்தில் அனுமதித்து, மேற்படி உள்ள நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

