லஞ்சம்,ஊழலில் தத்தளிக்கும் தமிழகம். முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூரில் காட்டம்.

லஞ்சம்,ஊழலில் தத்தளிக்கும் தமிழகம். முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூரில் காட்டம்.
லஞ்சம்,ஊழலில் தத்தளிக்கும் தமிழகம். முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூரில் காட்டம். பேரறிஞர் அண்ணா 116-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு கரூர் மாவட்ட அதிமுக சார்பில், கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் அவை தலைவர் திருவிக, கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் அவலங்களை மேற்கோள் காட்டி தனது வேதனையை தெரிவித்தார். அப்போது தேர்தலின் போது, உதயநிதி ஸ்டாலின் கூட்டுறவு வங்கியில் வைத்துள்ள ஐந்து பவுன் தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் கூட்டுறவு வங்கியில் வைத்த தங்க நகைகள் தற்போது மீட்க முடியாமல் போனது. அதிமுக ஆட்சியின் போது இன்றைய முதல்வர் ஸ்டாலின் கரண்டை தொட்டால் தான் ஷாக்கடிக்கும். ஆனால் அதிமுக ஆட்சியில் கரண்டை கேட்டாலே ஷாக் அடிக்கும் என்று கூறினார். ஆனால், தற்போது இரவு தூங்கும் போது கரண்ட் என நினைத்தாலே ஷாக் அடிக்கும் நிலை உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பழைய பென்ஷன் திட்டம் நிறுத்தப்பட்டு புதிய பென்சன் திட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் தான் உள்ளது. ஆனால், அரசு ஊழியர்கள் எங்களுக்கு பழைய பென்ஷன் திட்ட வேண்டுமென கேட்டனர். தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய பென்சன் திட்டம் கொண்டுவரப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் என்ன ஆனது? என கேள்வி எழுப்பிய அவர், இன்னும் 18 மாத அமாவாசை காலம்தான் இந்த ஆட்சிக்கு உள்ளது. அதை அறிந்த திமுகவினர் முடிந்தவரை சுரண்ட திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர். அதனால், தமிழகம் முழுவதும் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இதுதான் இந்த திமுக ஆட்சியின் நிலை என வேதனை தெரிவித்தார்.
Next Story