ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்

கீழக்கரையில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு செய்தார்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் அரசு மருத்துவமனை கட்டிடம் சுகாதார நிலையம் மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவற்றினை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆய்வு மேற்கொண்டார். இதனை அறிந்த கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளான துணை தலைவர் முகம்மது அஜிஹர், முகம்மது சுபைர், செயலாளர் சார்ப்ராஸ் நவாஸ், துணை செயலாளர்கள் பாசித் இலியாஸ் , பொருளாளர் முகம்மது ஜலீல் , பொருளாளர் முகம்மது பரூஸ் ஆகியோர் இணைந்து கீழக்கரை ஊர் சம்பந்தமான அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை மனுவை வழங்கினார். கீழக்கரை முழுவதும் உள்ள குப்பைகளை அகற்ற கோரியும் கூடுதலாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க கோரியும் அனைத்து அரசு பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் , டிஎஸ்பி அலுவலகம் அருகே நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் சாலையை அமைக்கக்கோரி உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் அதனை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் முறையாக ஆய்வு செய்து விரைவில் சரி செய்து தருவதாக தெரிவித்தார். சமூக ஆர்வலர்கள் ஹுசைன் அபு கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆணையாளர் ஆறுமுகம் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா நகர்மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story