ஊராட்சியின் உரிய அனுமதியின்றி கட்டிடத்தை விரிவு படுத்திய இரும்பு உருக்கு ஆலை அளவீடு
Palladam King 24x7 |21 Sep 2024 7:56 AM GMT
கட்டிடத்தை அளவீடு செய்த ஊராட்சி நிர்வாகத்தினர்.
பல்லடம் அருகே அனுப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராக இருந்து வரும் கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கரும் புகையால் காற்று மாசு ஏற்படுகிறது எனவும் இந்த புகை அருகில் உள்ள விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்படுத்துகிறது எனவும் மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை, கேன்சர் போன்ற நோய்களை ஏற்படுத்துவதாக கூறி அப்பகுதி மக்கள் உருக்கு ஆலையை தடை செய்ய கோரி 540 நாளாக கால காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் ஆலையை விரிவு பருத்தியதாக கூறப்படுகிறது.இதனை அடுத்து இன்று அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் கட்டிடம் முறையான அனுமதி பெறாமல் கட்டப் பட்டுள்ளதாகவும் அதனை அளவீடு செய்து ஊராட்சி நிர்வாகத்தில் அனுமதி பெற வேண்டும் என கூறி அளவீட்டு பணிகளுக்காக சென்றுள்ளார்.அதற்கு ஆலை நிர்வாகம் அனுமதி மறுத்ததால் பொதுமக்களுடன் உருக்கு ஆலை முன்பு ஊராட்சி தலைவர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காமநாயக்கன் பாளையம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டும் உள்ளே வர ஆலை நிர்வாகத்தினர் அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தினர் உள்ளே சென்று அளவீடு மேற்கண்ட பொழுது உரிய அனுமதி இல்லாமல் ஆலை விரிவாக்கம் செய்தது தெரியவந்தது இது குறித்து நாளை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Next Story