ஓலப்பாளையம் அருகே கால்நடை களுக்கான இலவச மருத்துவ முகாம்

ஓலப்பாளையம் அருகே கால்நடை களுக்கான இலவச மருத்துவ முகாம்
சில்ட்ரன் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
காங்கேயம் ஓலப்பாளையம் அருகே உள்ள பூசாரி வலசு கிராமத்தில் சில்ட்ரன் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் கால்நடைகளுக்கான நோய் தடுப்பூசி மற்றும் சினைப்பிடிப்பு ஊசி போடப்பட்டது. குடற்புழு நீக்க மருந்துகள், மடி நோய் தடுப்பு மருந்துகள், உன்னி மற்றும் ஈ தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டது. கால்நடைகளை நோய் தொற்றுகளிடம இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை குறித்து கால்நடை மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். முகாமின் முடிவில் 480 செம்மறி மற்றும் வெள்ளாடுகளுக்கு தேவையான குடற்புழு நீக்க மருந்துகளை சில்ட்ரன் சேரிட்டபிள் டிரஸ்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் வழங்கினார்.
Next Story