என்எல்சி ராட்சச மண் வெட்டும் இயந்திரத்தை இரவு நேரத்தில் சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

என்எல்சி ராட்சச மண் வெட்டும் இயந்திரத்தை இரவு நேரத்தில்  சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்
சுரங்க விரிவாக்கப் பணியில் சமமான இழப்பீடு வழங்க கோரி நடந்தது
சுரங்க விரிவாக்கப் பணியில் சமமான இழப்பீடு வழங்க கோரி என்எல்சி ராட்சச மண் வெட்டும் இயந்திரத்தை இரவு நேரத்தில் சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம், கிராம பகுதியில் என் எல் சி இந்தியா லிமிடெட் நிறுவனம் இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்காக ஏற்கனவே நிலத்தை கைய படுத்திய நிலையில் அவர்களுக்கு தற்போது வழங்குவது போல் உயர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். அதுவரை கையகப்படுத்தப்பட்ட பகுதியில் எந்த பணியும் மேற்கொள்ளக் கூடாது. என வலியுறுத்தி ஏற்கனவே பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் என்எல்சி எவ்வித முன் அறிவிப்பு இன்றி வாகனம் மற்றும் ராட்ச மண் வெட்டும் இயந்திரத்தை இரவு நேரத்தில் நிலத்தில் இறக்கி சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கிராமத்தில் வழங்கியது போல் உயர் இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி அதிகாரிகள் வாகனம் மற்றும் ராட்சச மண்வெட்டும் இயந்திரங்களை சிறை பிடித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போராட்டம். செய்தனர். இதற்கு என்எல்சி அதிகாரிகள் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்து பணியை தற்காலிகமாக நிறுத்தி கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story