வானூரில் பாசிப்பயிறு விதைப்பண்ணை வேளாண் அதிகாரிகள் ஆய்வு
Villuppuram King 24x7 |22 Sep 2024 1:06 AM GMT
பாசிப்பயிறு விதைப்பண்ணை வேளாண் அதிகாரிகள் ஆய்வு
வானுார் அரசு விதைப் பண்ணையில் புதிய ரக கோ-9 பாசிப் பயிறு விதைப்பண்ணையை, வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது:வானுார் அரசு விதைப் பண்ணையில் காரிப் பருவத்திற்கு புதிய பாசிப்பயிறு கோ-9 ரகம், 3 ஏக்கர் பரப்பளவில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு காய் பிடிக்கும் தருணத்தில் உள்ளது. இதற்காக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 25 கிலோ பாசிப்பயிறு கோ-9 வல்லுனர் விதைகள் பெறப்பட்டு ஆதார விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.இந்த ரகம் ஏப்ரல், மே மற்றும் ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சாகுபடி செய்ய உகந்தது. வயது 65 முதல் 70 நாட்களாகும். கடந்த 2023 ஆண்டு வெளியிட்ட புதிய ரகம் ஆகும்.மகசூல் எக்டருக்கு 825 கிலோ கிடைக்கப்பெறும். இயந்திரம் மூலம் அறுவடை செய்ய உகந்த ரகமாகும்.ஒரே சீராக முதிர்ச்சியடையும் திறன் கொண்ட ரகமாகும். இந்த புதிய ரகம் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் வேளாண் விரிவாக்க மையங்களுக்கு அனுப்பி விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.இவ்வாறு எத்திராஜ் கூறினார்.
Next Story